உற்பத்தித்திறன் தொழில்நுட்ப நிபுணர்களுக்கான APO தேசிய விருதுகள் வழங்கும் திட்டம்
உற்பத்தித்திறன் அளவை அதிகரிக்க நிறுவனங்களில், கைத்தொழில்களில் மற்றும் நாடுகளில் பிரயோகிக்கக்கூடிய அபிவிருத்தி அடைந்து வருகின்ற புதிய முறையியல்கள், கருவிசாதனங்கள் மற்றும் தொழில் நுட்பங்கள் என்பவற்றில் முக்கியமான பங்களிப்புகளை செய்துள்ள தனிநபர்களை இந்த APO தேசிய விருதுகள் வழங்கும் திட்டம் மதித்து கௌரவிக்கின்றது. இவர்கள் உற்பத்தித்திறன் மதிப்பீட்டினதும் செயற்படுத்துகை முயற்சிகளினதும் முக்கிய தரப்புகளாவர்.
மதிப்பீட்டுத் தகவுதிறன்கள் பின்வருமாறு:
கிபங்கும் பங்களிப்புகளும்
- நிறுவன அல்லது கைத்தொழில் மட்டத்தில் உற்பத்தி மேம்பாட்டில் இன்றியமையாத ஒரு பொறுப்பை வகித்தல்
- நிறுவனசார் வெற்றிக்கு இட்டுச்செல்கின்ற உற்பத்தித்திறன் முன்னெடுப்புகளை புரிந்துகொள்வதிலும் செயற்படுத்துவதிலும் சிறந்த ஈடுபாட்டை கொண்டிருத்தல்
- உற்பத்தித்திறனுக்கான பங்களிப்புகளின் நிமித்தம் உரிய விருதுகளுக்காக பெயர்குறிக்கப்பட்டுள்ளமை/அங்கீகாரம் கிடைத்துள்ளமை
தொழில்நுட்ப தகுதி
- உற்பத்தித்திறன் மேம்பாட்டுப் பிரச்சினைகளை அல்லது செயல்முறைகளை புரிந்துகொண்டு தெளிவாக விவரிக்கக்கூடிய ஆற்றல்
- உற்பத்தித்திறன் பிரச்சினைகளை பயனுள்ளவாறு தீர்ப்பதற்கு தொழில் நுட்பக் கோட்பாடுகளை பிரயோகிக்கக்கூடிய ஆற்றல்
- உண்மையான வாழ்க்கை நிலைகளில் பிரயோகத்தின் நிமித்தம் உரிய உற்பத்தித்திறன் முறையியல்களையும் மற்றும் கருவிசாதனங்களையும் உருவாக்கியிருத்தல் அல்லது பின்பற்றியிருத்தல்
- உற்பத்தித்திறன் பிரச்சினைகளை அடையாளப்படுத்துவதற்கு உரிய முறையியல்களினதும், கருவிசாதனங்களினதும், தொழில்நுட்பங்களினதும் தரத்தையும் தொழிழற்பாட்டையும் பரிசீலிப்பதற்கான ஆற்றல்
பெறுபேறுகளும் தாக்கங்களும்
- முறையியல்களையும், கருவிசாதனங்களையும், தொழில்நுட்பங்களையும் பிரயோகித்து அவற்றிலிருந்து அடைந்த தரமான கனியமான பெறுபேறுகள்
- ஒரு நீண்டகாலத்திற்கு பிரதிபலித்த தொடர்ச்சியான பெறுபேறுகள்
பல துறைகளுக்கும்/ஏனைய நாடுகளுக்கும் பிரயோகிக்கப்பட்டு பரம்பல் செய்யப்படுகின்ற முறையியல்கள், கருவிசாதனங்கள் மற்றும் தொழில் நுட்பங்கள்