ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பு 1961 மே மாதம் 11 ஆந் திகதி பிராந்திய அரசுகளுக்கிடையிலான ஓர் அமைப்பாக தாபிக்கப்பட்டது. அது அரசியல் அல்லாத இலாபமீட்டாத மற்றும் அனைத்து அங்கத்துவ நாடுகளுக்காகவும் சமத்துவத்துடன் செயலாற்றிவருகின்ற நிறுவனமாகும். அது ஆசியாவினதும் பசிபிக் பிராந்தியத்தினதும் நிலைபெறுதகு சமூக பொருளாதார அபிவிருத்திக்காக உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்காக பெரிதும் பங்களிப்புச் செய்கின்ற அமைப்பாகும்.

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பு அந்த அமைப்பின் 20 அங்கத்துவ நாடுகளுக்கிடையில் அறிவு, தகவல்கள் மற்றும் அனுபவங்களை பரிமாற்றிக்கொண்டு பரஸ்பர ஒத்துழைப்பினை விருத்திசெய்வதை நோக்கமாகக்கொண்டு செயலாற்றிவருவதோடு அந்த அமைப்பு கைத்தொழில்கள், சேவைகள் மற்றும் அரச ஆகிய பிரிவுகளை முதன்மையாகக்கொண்ட நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்தி அறிவினை விஸ்தரிப்பதை மேற்கொண்டு வருகின்றது. நிபுணத்துவ விரிவுரையாளர்களின் சேர்க்கையொன்று அவர்களிடம் நிலவுவதோடு அங்கத்துவ நாடுகளுக்கு அவர்களின் நிபுணத்துவ அறிவினை பெற்றுக்கொள்வதற்காக வசதிகளை அளிப்பதை ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பு மேற்கொண்டு வருகின்றது. அதைப்போலவே நிகழ்ச்சித்திட்டங்களுக்காக பங்குபற்றுனர்களை அவதானிப்பு அறிக்கைகள், வெளிக்களப் பயணங்களின்பால் ஆற்றுப்படுத்தியும் உன்னதமான அனுபவங்களை பரிமாற்றிக்கொண்டும் அவற்றுக்காக செலவுகளை ஏற்று தமது அங்கத்துவ நாடுகளுக்கிடையில் பல்வேறு துறைகளினூடாக அறிவினை விஸ்தரிப்பதற்காக பிரமாண்டமான அரும்பணியில் ஈடுபட்டு வருகின்றது.