ஜப்பான் இரண்டாவது உலகமகா யுத்தத்தின்போது பாரிய அழிவுக்கு உள்ளாகியிருப்பினும் பிற்காலத்தில் பாரிய கைத்தொழில் முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்க இயலுமாயிற்று. அதற்காக தரத்தை (Quality) முதன்மையாகக்கொண்ட தலைமைத்துவம் (Leadership) மற்றும் அணி வேலைகள் (Team Work) போன்ற முகாமைத்துவக் கோட்பாடுகள் ஜப்பானின் அனைத்து நிறுவனங்களிலும் பாவனைக்கு எடுக்கப்பட்டன. இதன் மூலமாக ஜப்பானின் அனைத்துப் பிரிவுகளிலும் தனித்துவமான முன்னேற்றம் உருவாகியது. இதன்போது அவர்கள் பிரயோகித்த அடிப்படையானதும் பிரதானமானதுமான சாதனமாக அமைந்தது ஐவகை (பஞ்சவிதி) எண்ணக்கரு அதாவது 5S ஆகும். உற்பத்தித்திறனின் அடிப்படை அல்லது அத்திவாரமாக அமைவதும் 5S ஆகும். நிகழ்காலத்திலும் ஜப்பான் முகாமைத்துவத்தின் பலம்பொருந்திய சாதனமாக 5S பாவிக்கப்பட்டு வருகின்றது. பாரிய கட்டிடமொன்றைக்கூட நன்றாக பாதுகாத்துக்கொள்ள பலம்பொருந்திய அத்திவாரமொன்று அவசியமாவதைப் போலவே நிறுவனத்தை பயனுறுதிமிக்க பலம்பொருந்திய ஒன்றாக அமைத்துக்கொள்வதற்காக 5S ஐ சிறப்பாக அமுலாக்கவேண்டியது அத்தியாவசியமாகின்றது.
எனவே 5S ஐ அமுலாக்கவேண்டியதன் அவசியப்பாடு மற்றும் முக்கியத்துவத்திற்கிணங்க தேசிய உற்பத்தித்திறன் செயலகம் மூலமாக இலங்கையின் ஒவ்வொரு நிறுவனத்திலும் 5S தரநியமத்தை ஏற்படுத்துவதற்காக 5S சான்றுப்படுத்துகை நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனூடாக தொழிலாளர் பிணக்குகளை குறைத்தல், வேலைநிறுத்தம் மற்றும் சட்டப்படி வேலைசெய்தல் போன்ற தொழில்சார் வழிமுறைகளை தடுக்க இயலுமானதாக அமைவதோடு ஊழியர் மனநிறைவினை மேம்படுத்துதல் போன்ற நிறுவனரீதியான அநுகூலம்மிக்க நிலைமைகளை பெற்றுக்கொள்ள இயலும்.
அதைப்போலவே சேவைபெறுனர்கள் / வாடிக்கையாளர்களுக்கு தரம்மிக்க உச்சஅளவிலான சேவையை/பண்டங்களை பெற்றுக்கொள்ள அவசியமான சுற்றுச்சூழலை வகுப்பதும் இதன்போது இடம்பெறுகின்றது. வாடிக்கையாளர்களின் மனதைக் கவர்கின்ற மானிட உறவுகளையும் பௌதீக சுற்றாடலையும் கொண்ட நிறுவனம் இதனூடாக உருவாக்கப்படுவதும் இதிலிருந்து கிடைக்கின்ற மற்றுமொரு நன்மையாகும். 5S தரச் சான்றிதலைப் பெற்றுக்கொள்ளலானது பயனுறுதிமிக்க நிறுவனமொன்றாக மாற்றுவதற்கான பலம்பொருந்திய வாய்ப்பாக அமையும்.
5S is a scientific approach that can be used for maintaining a methodical workplace.
It is a strategy for organizing a workplace for efficiency and effectiveness and to ensure enhanced safety and security.
- Seiri - Sort
- Seiton - Set in order
- Seiso - Shine
- Seikethsu - Standardize
- Sithsuke - Sustain