பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் வழிகாட்டலுக்கிணங்க தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் தேசிய உற்பத்தித்திறன் விருதுக்கான போட்டித்தொடர் புத்தம்புதிய சர்வதேச மதிப்பீட்டுத் தகவுத்திறன்களுக்கு அமைவாக வெளியிடப்படுகின்றது.
உற்பத்தித்திறன் எண்ணக்கருக்கள் பற்றி நிறுவனம் கொண்டுள்ள அறிவினை நடைமுறையில் யதார்த்தமானதாக மாற்றுகின்ற செயற்பாங்கு அதன்போது மதிப்பீட்டுக்கு உள்ளாக்கப்படுகின்றது. மட்டுப்படுத்தப்பட்ட வளங்களை உச்ச வினைத்திறனுடனும் பயனுறுதியுடனும் பயன்பாட்டுக்கு எடுத்து நிறுவனம்சார் நோக்கங்களை அடைவதன் உன்னதமான தன்மையை தொழில்நுட்பரீதியாக மிகவும் ஒழுங்கமைந்த மதிப்பீட்டுச் செயற்பாங்கினூடாக அளவிட்டு தேசிய மட்டத்தில் மதிப்பீட்டுக்கு உள்ளாக்குவது இதன் முக்கியமான குறிக்கோளாகும்.
உற்பத்தித்திறன் எண்ணக்கருக்கள் ஊடாக மிகவும் உன்னதமான மட்டங்களை நோக்கிச் செல்வதற்கு அவசியமான அறிவினைப் பெற்றுக்கொடுத்து வழிகாட்டலை வழங்க தேசிய உற்பத்தித்திறன் செயலகம் சதாகாலமும் தயார்நிலையில் உள்ளது. தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டித்தொடருக்காக நீங்கள் காட்டுகின்ற ஒத்துழைப்பினையும் பங்களிப்பினையம் பெரிதும் பாராட்டுவதோடு உங்களின் எல்லாவிதமான வெற்றிகளுக்காகவும் எங்களின் இதயபூர்வமான நல்வாழ்த்துக்களைத் தெரித்துக்கொள்ள விரும்புகிறேன்.
பாடசாலைகள் பிரிவு
தரமான கல்வியின் நிலைபெறுதகு தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் பாடசாலைகள் பிரிவின் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்காக தேசிய உற்பத்தித்திறன் செயலகம் தொடர்ச்சியாக வழிகாட்டல்களை வழங்கி வருகின்றது.
தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டித்தொடர் ஊடாக உன்னதமான உற்பத்தித்திறன் செயலாற்றுகையைக்கொண்ட பாடசாலைகள் மதிப்பீட்டுக்கும் பாராட்டுக்கும் உள்ளாக்கப்படுகின்றன. உற்பத்தித்திறன் எண்ணக்கருக்கள் நடைமுறைப் பாவனை மூலமாகப் பெற்றுக்கொண்ட வெற்றிகளை மதிப்பீடுசெய்கின்ற இந்த தேசிய பிரயத்தனத்துடன் ஒருங்கிணையுமாறு நாங்கள் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டித்தொடரின் நோக்கங்கள் :
- தரம், உற்பத்தித்திறன் மற்றும் சேவையை விருத்திசெய்வதற்கான சாதகமான நடைமுறைகளை கடைப்பிடிப்பதற்காக எல்லாப் பாடசாலைகளையும் ஊக்குவித்தல்.
- தேசிய நோக்கு மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துடன் அமைந்தொழுகி தேசிய அபிவிருத்திக்கு முனைப்புடன் பங்களிப்புச் செய்யக்கூடிய எதிர்கால தலைமுறையினரை உருவாக்குவதற்கேதுவாக பாடசாலைகளை ஆற்றுப்படுத்துதல்.
- வளங்களை சிக்கனமாகப் பாவிக்க மாணவர்களுக்கு பயிற்சியளிப்பதன் மூலமாக நிலைபெறுதகு அபிவிருத்தி ஊடாக எதிர்கால உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள பாடசாலைகளை தயார்நிலைப்படுத்துதல்.
- முன்மாதிரியான பாடசாலை முறைமையையும் மாணவர் தலைமுறையினரையும் இனங்காணல் மற்றும் தேசிய மட்டத்தில் மதிப்பீட்டுக்கு உள்ளாக்குதல்.
பாடசாலைகள் வகைப்படுத்துதல் :
தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டித்தொடர் ஐந்து வகைகளின் கீழ் நடத்தப்படும்.
வகை 1 | - | உயர்தரம் வரை வகுப்புகள் நடத்தப்படுகின்ற அரசாங்க பாடசாலைகள் |
வகை 2 | - | சாதாரண தரம் வரை வகுப்புகள் நடத்தப்படுகின்ற அரசாங்க பாடசாலைகள் |
வகை 3 | - | தரம் 5 வரை வகுப்புகள் நடத்தப்படுகின்ற அரசாங்க பாடசாலைகள் |
வகை 4 | - | தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகள் |
வகை 5 | - |
பிரிவெனாக்கள்
|
- கல்வி அமைச்சின்கீழ் பதிவுசெய்யப்பட்ட அனைத்துப் பாடசாலைகளும் 1982 இன் கம்பெனிகள் சட்டத்தின் 17 வது பிரிவின்கீழ் பதிவுசெய்யப்பட்ட பாடசாலைகளும் மாத்திரமே 4 வது தொகுதியின்கீழ் தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளாக கருதப்படும்.
சமர்ப்பித்தல் :
விண்ணப்பப் பத்திரம் :
பதிவுக் கட்டணம் :
- பாடசாலைகள் / பிரிவெனாக்கள் - ரூ.575.00
- தனியார் / சர்வதேச பாடசாலைகள் - ரூ.3,450.00
உற்பத்தி மற்றும் சேவைகள்
உற்பத்திகள் மற்றும் சேவைகள் பிரிவு ஒரு நாட்டின் பொருளாதார விருத்தியின் இயக்குவிசையாக செயற்படுகின்றது. உற்பத்தித்திறன் எண்ணக்கருக்களை ஈடுபடுத்துவதன் மூலமாக இப்பிரிவின் வெற்றியை அடைய இயலும்.
தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டித்தொடர் ஊடாக உன்னதமான உற்பத்தித்திறன் செயலாற்றுகையைக்கொண்ட நிறுவனங்கள் மதிப்பீட்டுக்கும் பாராட்டுக்கும் உள்ளாக்கப்படுகின்றன. உற்பத்தித்திறன் எண்ணக்கருக்கள் நடைமுறைப் பாவனை மூலமாகப் பெற்றுக்கொண்ட வெற்றிகளை மதிப்பீடுசெய்கின்ற இந்த தேசிய பிரயத்தனத்துடன் ஒருங்கிணையுமாறு நாங்கள் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டித்தொடரின் நோக்கங்கள் :
- தரம், உற்பத்தித்திறன் மற்றும் சேவையை விருத்திசெய்வதற்கான சாதகமான நடைமுறைகளை கடைப்பிடிப்பதற்காக எல்லா நிறுவனங்களையும் ஊக்குவித்தல்.
- தேசிய நோக்கு மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துடன் அமைந்தொழுகி தேசிய அபிவிருத்திக்கு முனைப்புடன் பங்களிப்புச் செய்து இலங்கையர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகின்ற தேசிய தொழிற்பாட்டுக்காக நிறுவனங்களை ஆற்றுப்படுத்துதல்.
- முன்மாதியான நிறுவனங்களை இனங்காணல் மற்றும் தேசிய மட்டத்தில் மதிப்பீட்டுக்கு உள்ளாக்குதல்.
- வளங்களை சிக்கனமாகப் பாவிப்பதற்கு நிறுவனங்களுக்கு பயிற்சியளிப்பதன் மூலமாக நிலைபெறுதகு அபிவிருத்தி ஊடாக எதிர்கால உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கேற்றவாறு உற்பத்தி மற்றும் சேவைகள் பிரிவினை தயார்நிலைப்படுத்துதல்.
நிறுவனங்களை வகைப்படுத்துதல்
நிறுவனங்கள் பிரதானமாக இரண்டு வகையினவாகும்.
வகை 1 | - | உற்பத்திகள் பிரிவு |
வகை 2 | - | சேவைகள் பிரிவு |
மேற்படி ஒவ்வொரு பிரிவும் ஊழியர் எண்ணிக்கையை அடிப்படையாகக்கொண்டு மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகிறது. இது பின்வருமாறு அமையும்.
பாரிய அளவிலானவை | - | 250 இற்கு மேற்பட்ட முழுநேர ஊழியர்களைக்கொண்ட நிறுவனங்கள் |
நடுத்தர அளவிலானவை | - | 50 – 250 இற்கு இடைப்பட்ட முழுநேர ஊழியர்களைக்கொண்ட நிறுவனங்கள் (50 மற்றும் 250 ஐ உம் உள்ளிட்டதாக) |
சிறிய அளவிலானவை | - | 50 இற்கு குறைவான முழுநேர ஊழியர்களைக்கொண்ட நிறுவனங்கள் |
சமர்ப்பித்தல் :
விண்ணப்பப் பத்திரம் :
பதிவுக் கட்டணம் :
- பாரிய அளவிலானவை (250 இற்கு மேற்பட்ட முழுநேர ஊழியர்களைக்கொண்ட நிறுவனங்கள்) - ரூ. 25,000.00
- நடுத்தர அளவிலானவை (50 – 250 இற்கு இடைப்பட்ட முழுநேர ஊழியர்களைக்கொண்ட நிறுவனங்கள் - ரூ. 15,000.00
- சிறிய அளவிலானவை (50 இற்கு குறைவான முழுநேர ஊழியர்களைக்கொண்ட நிறுவனங்கள்) - ரூ. 5000.00
அரச பிரிவு
இலங்கையின் மைய நிருவாக அலகாக அரச பிரிவு இயங்கி வருகின்றது. அரச பிரிவினை பலப்படுத்துவதன் மூலமாக மக்களின் வாழக்கைத்தரத்தை மேம்படுத்துதலையும் நாட்டின் பொருளாதார விருத்தியையும் அடைய இயலும்.
தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டித்தொடர் ஊடாக உன்னதமான உற்பத்தித்திறன் செயலாற்றுகையைக்கொண்ட நிறுவனங்கள் மதிப்பீட்டுக்கும் பாராட்டுக்கும் உள்ளாக்கப்படுகின்றன. உற்பத்தித்திறன் எண்ணக்கருக்கள் நடைமுறைப் பாவனை மூலமாகப் பெற்றுக்கொண்ட வெற்றிகளை மதிப்பீடுசெய்கின்ற இந்த தேசிய பிரயத்தனத்துடன் ஒருங்கிணையுமாறு நாங்கள் உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டித்தொடரின் நோக்கங்கள் :
- தரம், உற்பத்தித்திறன் மற்றும் சேவையை விருத்திசெய்வதற்கான சாதகமான நடைமுறைகளை கடைப்பிடிப்பதற்காக எல்லா நிறுவனங்களையும் ஊக்குவித்தல்.
- தேசிய நோக்கு மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்துடன் அமைந்தொழுகி தேசிய அபிவிருத்திக்கு முனைப்புடன் பங்களிப்புச் செய்து இலங்கையர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகின்ற தேசிய தொழிற்பாட்டுக்காக நிறுவனங்களை ஆற்றுப்படுத்துதல்.
- முன்மாதியான நிறுவனங்களை இனங்காணல் மற்றும் தேசிய மட்டத்தில் மதிப்பீட்டுக்கு உள்ளாக்குதல்.
- வளங்களை சிக்கனமாகப் பாவிக்க நிறுவனங்களுக்கு பயிற்சியளிப்பதன் மூலமாக நிலைபெறுதகு அபிவிருத்தி ஊடாக எதிர்கால உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள நிறுவனங்களை தயார்நிலைப்படுத்துதல்.
நிறுவனங்களை வகைப்படுத்துதல் :
தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் போட்டிக்காக விண்ணப்பிக்ககூடிய தொகுதிகள் 06 ஆகும்.
அமைச்சுக்கள் | - | மத்திய அரசாங்கத்தின் அமைச்சுக்கள் மற்றும் மகாண பிரதம செயலகங்கள் உள்ளடங்கும் |
மாகாணசபை அமைச்சுக்கள் | - | அதன்கீழ் மாகாண அமைச்சுகளுக்கு மேலதிகமாக சபை செயலாளர் அலுவலகங்கள், ஆளுனர் அலுவலகங்கள் மற்றும் மாகாண அரச சேவைகள் ஆணைக்குழுவும் அடங்கும். |
அரசாங்க திணைக்களங்கள் | - | அதில் மத்திய அரசாங்கத் திணைக்களங்கள், மாகாண சபைகளின்கீழ் இயங்கிவருகின்ற திணைக்களங்கள், மாவட்டச் செயலகங்கள், திணைக்களமொன்றின்கீழ் உள்ள ஊழியர் எண்ணிக்கை 51 அல்லது அதற்கு மேற்பட்ட துணை நிறுவனங்கள் அடங்கும். |
பிரதேச செயலகங்கள் | - | - |
உள்ளூராட்சி நிறுவனங்கள் | - | - |
நுண் அளவிலான நிறுவனங்கள் | - | அமைச்சுக்கள், மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின்கீழ் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கை 50 அல்லது அதற்கு குறைவான மற்றும் 05 அல்லது அதற்கு மேற்பட்ட துணை நிறுவனங்களால் மாத்திரமே இதற்காக முன்வர இயலும். (நிறுவனமொன்றின் கீழுள்ள துணைப்பிரிவுக்கு இதன்பொருட்டு முன்வர இயலாது) |
- கவனிக்கவும் : அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்டமுறையான நிறுவனங்கள் இலாபமீட்டும் குறிக்கோளுடன் தாபிக்கப்பட்டுள்ளமையால் மேற்படி நிறுவனங்கள் உற்பத்தி மற்றும் சேவைகள் பிரிவின்கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இயலும்.
சமர்ப்பித்தல் :
விண்ணப்பப் பத்திரம் :
பதிவுக் கட்டணம் :
- அரச பிரிவு - ரூ.2,500.00